TNPSC Thervupettagam

பாதரசத்தின் அளவு அதிகரிப்பு

April 21 , 2025 4 days 71 0
  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது, தெற்கு மண்டலத்தின் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) அறிவுறுத்தலின் பேரில் சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.
  • NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனத்தின் I, 1 A மற்றும் II ஆகிய சுரங்கங்கள் மற்றும் இரண்டாம் அனல் மின் நிலையம் அருகே அமைந்துள்ள நீர்நிலைகளில் பாதரசத்தின் அளவு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவு எடுத்துரைக்கிறது.
  • இங்குள்ள நீர்நிலைகளில் நீரில் சேகரிக்கப்பட்ட 17 மாதிரிகளுள் 15 மாதிரிகளில் மொத்தப் பாதரசத்தின் செறிவு லிட்டருக்கு 0.0012 மில்லி கிராம் முதல் 0.115 மில்லி கிராம் வரையில் குடிநீருக்கான தரநிலைகளின் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
  • இந்த நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான பக்கிங்ஹாம் கால்வாயில், பாதரசத்தின் செறிவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 115 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இதே போல், நிலத்தடி நீர் மாதிரிகளில், பாதரசத்தின் இருப்பு லிட்டருக்கு 0.0025 மில்லி கிராம் முதல் 0.0626 மில்லி கிராம் வரை இருப்பது கண்டறியப்பட்டது என்பதோடு இது அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட 2.5 முதல் 62 மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்