TNPSC Thervupettagam

பாதாமி சாளுக்கியர் கல்வெட்டுகள்

February 27 , 2024 270 days 415 0
  • தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் முடிமாணிக்யம் கிராமத்தில் சுமார் 1,300-1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு பாதாமி சாளுக்கியக் கோயில்களும், 1,200 ஆண்டுகள் பழமையான முத்திரைக் கல்வெட்டும் சமீபத்தில் கண்டறியப்பட்டன.
  • இந்த இரண்டு கோயில்களும் கி.பி.543 முதல் கி.பி.750 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை ஆகும்.
  • இந்தக் கல்வெட்டு ஆனது பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சியுடன் தொடர்புடைய கி.பி 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
  • இக்கோயில்கள் ரேகா நாகரா வடிவத்தில் கடம்ப நகர பாணியில் இருப்பதால் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.
  • இன்று தெலுங்கானாவில் இத்தகையக் கட்டிடக்கலைக்கு இதுவே ஒரே உதாரணமாக விளங்குகிறது.
  • ‘கண்டலோரன்று’ என எழுதப்பட்டுள்ள இந்த முத்திரைக் கல்வெட்டானது கிராமத்தில் உள்ள ஐந்து கோயில்களை உள்ளடக்கிய குழுவின் தூண்களில் பொறிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்