பிளான் இந்தியா எனும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான அரசு சாரா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பாதிப்படையக் கூடும் பாலினத்தவர் குறியீட்டின் படி (Gender Vulnerability Index) கோவா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு கல்வி, சுகாதாரம், வறுமை போன்ற பெண் குழந்தைகளின் நிலையோடு தொடர்புடைய 4 முக்கிய அம்சங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் தர வரிசைப்படுத்த இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது.
வேறுபட்ட சூழ்நிலைகளில் குழந்தைகளை பாதிக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாதிக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் பரிமாணங்களை விரிவான முறையில் புரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தொண்டு நிறுவனத்தின் அனைத்து குழந்தைகளுக்கான பிரச்சார திட்டத்தின் ஆராய்ச்சிப் படி இக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம் பிடித்த கோவாவை அடுத்து கேரளா, மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்கள் உள்ளன. 30வதாக கடைசி இடத்தில் பீகாரும், 29 இடத்தில் புதுதில்லியும், 28 இடத்தில் உத்திரப்பிரதேசமும் உள்ளன.
வட இந்திய மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் மட்டுமே 6 வது இடத்தைப் பெற்று உயர்ந்த தர வரிசையைப் பெற்றுள்ளது.