TNPSC Thervupettagam

பாதுகாக்கப்பட்ட இனங்களின் பட்டியலில் நீலக்குறிஞ்சி

January 17 , 2023 551 days 264 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது (MoEF) நீலக் குறிஞ்சியினை  (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) பாதுகாக்கப்பட்ட தாவரங்களின் பட்டியலில் சேர்த்து, 1972 ஆம் ஆண்டு வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டத்தின் IIIவது அட்டவணையின் கீழ் பட்டியலிட்டுள்ளது.
  • இதன் படி இந்தச் செடியைப் பிடுங்குபவர் அல்லது இதனை அழிப்பவர்களுக்கு ரூ. 25,000 அபராதம் மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
  • இந்த ஆணைப் படி, நீலக்குறிஞ்சியினைப் பயிரிடுவதற்கும் அல்லது அதனை வைத்து இருப்பதற்கும் அனுமதியில்லை.
  • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், கிட்டத்தட்ட 70 வகையான நீலக்குறிஞ்சி செடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா எனப்படும் நீலக் குறிஞ்சி மிகவும் பிரபலமானதாகும்.
  • இருப்பினும், நீலக் குறிஞ்சியின் வேறு சில அரிய வகைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்