உலக சுகாதார அமைப்பானது, பாதுகாப்பற்றக் குடிநீர், தூய்மை முறை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றினால் ஏற்படும் நோய்களின் சுமை: 2019 என்று பெயரிடப்பட்ட அறிக்கையின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தினைச் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலக மக்கள்தொகையில் பாதி பேருக்கு இன்னும் குடிநீர், தூய்மை நிலை மற்றும் சுகாதாரம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறவில்லை.
இது 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 1.4 மில்லியன் மக்களின் உயிரிழப்பு மற்றும் 74 மில்லியன் மிகவும் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்பிற்கும் காரணமாக இருந்தது.
உலகளவில், 771 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான தண்ணீர் வசதி இல்லை என்பதோடு 1.7 பில்லியன் மக்களுக்குக் கழிப்பறை வசதியும் இல்லை.
பாதுகாப்பற்றக் குடிநீர், தூய்மை நிலை மற்றும் சுகாதாரம் (WASH) ஆகியவை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஏற்பட்ட 395,000 உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகும்.
வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட 273,000 உயிரிழப்புகளும், கடுமையான சுவாச நோய்த் தொற்றுகளால் ஏற்பட்ட 112,000 உயிரிழப்புகளும் இதில் அடங்கும்.
மண் மூலம் பரவும் குடற்புழுப் பாதிப்பினால் 1.5 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வயிற்றுப் போக்கு நோய்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் 55 மில்லியனுக்கும் அதிகமான மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகளுடன் இதன் தொடர்புடையப் பாதிப்புகளில் பெரும்பங்கினைக் கொண்டுள்ளன.
கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் ஆனது 356,000 உயிரிழப்புகள் மற்றும் 17 மில்லியன் மிகவும் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகளுடன், இரண்டாவது பெரியப் பங்களிப்பாளராக அடையாளம் காணப் பட்டுள்ளது.
ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோயில் 10 சதவீதம் (புரத -ஆற்றல் ஊட்டச் சத்து குறைபாடு (PEM)) ஆனது இந்த வயதினரில் ஏற்படும் மொத்தம் 8,000 உயிர் இழப்புகள் மற்றும் 825,000 மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஒரு ஆயுட்கால (DALY) இழப்பிற்குக் காரணமாக அமைகிறது.
2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 384,000 வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 20 மில்லியன் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால (DALY) இழப்புகள் பதிவாகியுள்ளன.