TNPSC Thervupettagam

பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான இடப்பெயர்விற்கான உலக உடன்படிக்கை

July 21 , 2018 2319 days 657 0
  • சர்வதேச இடப்பெயர்வினை சிறப்பாக நிர்வகிப்பதற்கான பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான இடப்பெயர்விற்கான உலக உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் முதன் முதலாக இறுதிபடுத்தியுள்ளது.
  • சர்வதேச இடப்பெயர்வு, இடப்பெயர்விற்கான உரிமையை வலுப்படுத்துதல், நிலையான மேம்பாட்டிற்கான பங்களிப்பு ஆகியவற்றில் உள்ள சவால்களை குறிப்பிட்டுக் காட்டுவதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
  • முழுமையான மற்றும் விரிவான முறையிலான சர்வதேச இடப்பெயர்வின் பரந்த அளவிலான பரிமாணங்களை ஒன்று சேர்ப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
  • அமெரிக்காவைத் தவிர ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையினை ஒப்புக்கொண்டுள்ளனர். இது சட்டப்பூர்வமாக யாரையும் கட்டுப்படுத்தாத ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்