இது பெண்களுக்கான சரியான சுகாதார நலம் மற்றும் கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்களுக்கான மகப்பேறு வசதிகள் ஆகியவை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இது இந்திய வெள்ளை நாடாக் கூட்டிணைவின் (WRAI - White Ribbon Alliance India) ஒரு முன்னெடுப்பாகும்.
2003 ஆம் ஆண்டில் இந்திய அரசானது ஏப்ரல் 11 ஆம் தேதியை பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமாக அறிவித்தது.
சமூக அளவில் பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினத்தைக் கொண்ட உலகின் முதலாவது நாடு இந்தியா ஆகும்.
குழந்தைப் பிறப்பில் மிகவும் அபாயமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக அளவில் மொத்த தாய்மார்கள் இறப்பில் 15% இறப்புகள் இங்கு நிகழ்கின்றன.
கஸ்தூரிபா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
கஸ்தூரிபா காந்தி நமது தேசத் தந்தையான மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியின் மனைவி ஆவார்.