பாதுகாப்பான வங்கி நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி சென்னை நகரக் காவல்துறையானது ஆக்சிஸ் வங்கியுடன் சேர்ந்து “வாய்க்குப் போடுங்க பூட்டு” என்ற ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இணையவழிக் குற்றப் பிரிவில் பதிவாகும் கிட்டத்தட்ட 80 சதவீத வழக்குகள் ஏடிஎம் கடவுச்சொற்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்கள் ஆகியவற்றைத் திருடுதல் தொடர்பானவையாகும்.