பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆளில்லா வான்வழி வாகனம்
January 14 , 2023 684 days 440 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆனது வரம்பற்றப் பல்வேறு சுழலிகளால் இயங்கக் கூடிய ஒரு ஆளில்லா வான்வழி வாகனத்தினை (UAV) உருவாக்கியுள்ளது.
இது 5 கிலோ எடை கொண்ட தாங்கு சுமையுடன் பறக்கும் திறன் கொண்டது மற்றும் எதிரி நாட்டுப் பிரதேசங்களில் கூட குண்டுகளையும் வீசும் திறன் கொண்டது.
பல்வேறு சுழலிகளால் இயங்கக் கூடிய இந்த வாகனமானது, 5 கி.மீ. சுற்றளவு வரையிலான பகுதிகளில் குறிப்பிட்ட இலக்கு நிர்ணய வழிசெலுத்தலுடன் தானாகவே பணிகளை மேற்கொள்ளக் கூடியது.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பல்வேறு சுழலிகளால் இயங்கக் கூடிய ஒரு ஆளில்லா வான்வழி வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.