TNPSC Thervupettagam

பாதுகாப்பு உற்பத்தி மீதான வரைவு கொள்கை

March 31 , 2018 2304 days 646 0
  • பொது மற்றும் தனியார் துறையின் செயற்பூர்வ பங்களிப்போடு உலகின் முதல் 5 பாதுகாப்பு சாதன உற்பத்தியாளர்களுள் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு சாதனங்களின்  உற்பத்தி மீதான வரைவுக் கொள்கையை (draft policy on defence production) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • தற்போது இந்தியா உலகின் மிகப்பெரிய இராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்களின் இறக்குமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.
  • பாதுகாப்பு சாதனங்களின் உற்பத்தி மீதான வரைவு கொள்கையின் நோக்கம்
    • பாதுகாப்பு சாதனங்களின் உற்பத்தியில் இந்தியாவை சுய சார்புடையதாக (self-reliant)  உருவாக்குதல் மற்றும் நட்பு நாடுகளின் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
    • பொது மற்றும் தனியார் துறையின் செயற்பூர்வ பங்களிப்போடு உலகின் முதல் 5 பாதுகாப்பு சாதன உற்பத்தியாளர்களுள் ஒன்றாக இந்தியாவை உருவாக்குதல்.
    • உள்நாட்டு இராணுவ சாதன தொழிற்சாலைகளை மேம்படுத்தி 2025ல் இராணுவப் பொருட்கள் மற்றும், சேவைகளில் 1,70,000 கோடி வருவாயை அடைதல்.
  • இந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளவை
    • இராணுவப் பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான உரிமம் வழங்கல் செயல்முறைகள் தளர்த்தப்படும்.
    • உரிமம் வழங்குவதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் மற்றும் அவை குறைக்கப்படும்.
    • இராணுவப் பாதுகாப்பு தொழிற்சாலைகளின் உரிமங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்