பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு
October 14 , 2022
647 days
300
- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் 12 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆனது இந்த ஆய்வினை மேற்கொண்டது.
- இது ஆயுத உற்பத்தியில் தன்னிறைவினை மதிப்பீடு செய்தது.
- மாபெரும் வித்தியாசத்தில் மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் சீனா முன்னணி இடத்தினைப் பெற்றது.
- சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா இதில் நான்காவது இடத்தில் உள்ளது.
- தைவான், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இதில் முறையே ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளன.
- பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் இந்தோனேசியா (9வது), மலேசியா (10வது) மற்றும் தாய்லாந்து (11வது) ஆகியவையும் உள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-4.png)
Post Views:
300