பாதுகாப்பு சம்பளப் பெட்டகத்தின் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம்
April 21 , 2018 2511 days 791 0
இந்திய ராணுவம் பாதுகாப்பு சம்பளப் பெட்டகத்திற்காக HDFC வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய ராணுவம், HDFC வங்கியுடன் முதன் முதலாக 2011ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இவ்வொப்பந்தம் 13 மார்ச் 2015 அன்று புதுப்பிக்கப்பட்டது.
தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பணியிலுள்ள படைவீரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வீரர்களின் குடும்பங்கள் ஆகியோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்றங்களை ஏற்படுத்தும் வசதி கொண்ட ஒரு ஒப்பந்தம் ஆகும்.
தற்போது பாதுகாப்பு சம்பளப் பெட்டகம் தொடர்பாக இந்திய ராணுவம் 11 பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.