TNPSC Thervupettagam

பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டம்

May 24 , 2020 1520 days 609 0
  • பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணம் மற்றும் விண்வெளி உபகரணம் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களுக்கு 75% வரை அரசு நிதி உதவியின் நோக்கில் வழங்கப் படும்.
  • மீதமுள்ள 25% திட்ட செலவைச் சிறப்பு நோக்குக் குழுவைக் கொண்ட நிறுவனம் ஏற்க வேண்டும். அதன் பங்குதாரர்கள் இந்தியத் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு சிறப்பு நோக்குக் குழு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, ஒரே மற்றும் குறுகிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்ட நிறுவனமாகும்.
  • மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளை அமைத்துள்ளது.
  • லக்னோ, கான்பூர், ஆக்ரா, அலிகார், சித்திரகூட் மற்றும் ஜான்சி ஆகியவை உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளுள் அடங்கும்.
  • தமிழகத்தின் பாதுகாப்புத் தொழில்துறைப் பெருவழிப் பாதைகளுள் சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்