TNPSC Thervupettagam

பான்-ஐநா பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு

November 21 , 2017 2561 days 971 0
  • பருவநிலை மாறுபாடு மீதான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) உறுப்பு நாடுகளின் பருவநிலை மாறுபாட்டுக்கான 23 வது மாநாடு [COP 23 – Conference of Parties 23] அண்மையில் ஜெர்மனியில் உள்ள பான் (Bonn) நகரில் நடைபெற்றது.
  • பிஜி (Fiji) நாடு இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியது.
  • இந்த மாநாட்டின் முடிவில் உறுப்பு நாடுகள் “தலாநோவா பேச்சுவார்த்தை” (Talanoa dialogue) – க்கான திட்ட வரைவை ஏற்படுத்தியுள்ளன.
  • தலாநோவா பேச்சுவார்த்தையானது பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான உறுப்பு நாடுகளின் தணிப்பு நடவடிக்கைகளை மதிப்பிடும் ஓராண்டு கால செயல்முறையாகும்.
  • மேலும் இம்மாநாட்டில் 2015-ல் மேற்கொள்ளப்பட்ட “பாரிஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தை” அமல்படுத்துவதற்குத் தேவையான விதிகள் வகுக்கப்பட்டதோடு, வளர்ந்த பணக்கார நாடுகள் அவை ஏற்றுக்கொண்ட     2020-க்கு முன்னதான பருவநிலை மாற்றத்  தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிட ஏற்ற     கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிகளும் இயற்றப்பட்டன.
  • தலாநோவா என்பது பிறரின் மீது குறையைச் சாடாமல் நாடுகளுக்கிடையேயான வேற்றுமைகளை அனைவரும் பங்கேற்கும், உள்ளடங்கிய, வெளிப்படையான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண பிஜி மற்றும் பசுபிக் தீவுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய தீர்வை அணுகுமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்