TNPSC Thervupettagam
June 19 , 2019 1988 days 715 0
  • காடுகள் நிலப்பரப்பினை மீட்டெடுத்தலுக்கு இந்தியாவின் திறனை அதிகரிப்பதற்காக உறுப்பினர் நாடுகளின் மாநாடு – 14 என்ற நிகழ்வை முன்னிட்டும் சர்வதேச முன்னெடுப்பின் ஒரு பகுதியாகவும் “பான் சவால்” என்ற ஒரு தலைமைத் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தொடங்கி வைத்தார்.
  • பான் சவால் பின்வருவனவற்றை கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச முயற்சியாகும்.
    • உலகின் அழிக்கப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 150 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை 2020 ஆம் ஆண்டில் மீட்டெடுத்தல்
    • 2030 ஆம் ஆண்டில் 350 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுத்தல்.
  • இந்தத் தனித்துவத் திட்டமானது ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் சோதனை அடிப்படையில் 3.5 ஆண்டு காலத்திற்குச் செயல்படுத்தப்படவிருக்கின்றது.
  • 2016 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 29 சதவிகித இந்திய நிலங்கள் சிதைக்கப் பட்டுள்ளன.
  • மேலும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலைவனமாக்கலைத் தடுப்பதற்கான ஐ.நா ஒப்பந்தத்தின் (United Nations Convention to Combat Desertification - UNCCD) COP-14 endra மாநாட்டை முதன்முறையாக இந்தியா நடத்தவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்