TNPSC Thervupettagam
May 27 , 2023 421 days 263 0
  • சமீபத்தில் நேச்சர் என்ற இதழில் பான் ஜீனோம் குறிப்பு வரைபடம் பற்றிய ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.
  • இது பெயர் அறியப்படாத  47 நபர்களிடமிருந்து (19 ஆண்கள் மற்றும் 28 பெண்கள்) பல்வேறு மரபணுக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
  • அவர்கள் முக்கியமாக ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றாலும் சிலர் கரீபியன், அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்தும்  வந்தவர்கள் ஆவார்கள்.
  • நமது மரபணு எனபது ஒவ்வொன்றும் நியூக்ளியோடைடுகள் அல்லது தளங்கள் எனப் படும் மில்லியன் கணக்கான அளவில் தனிப்பட்ட கட்டுமானத் தொகுதிகளால் ஆன வகையில் 23 வெவ்வேறு சரங்களைக் கொண்டுள்ளது.
  • நமது 23 குரோமோசோம்கள் அனைத்தையும் உருவாக்க நான்கு வகையான கட்டுமானத் தொகுதிகளின் (A, T, G மற்றும் C) பல்வேறு சேர்க்கைகளில் பல மில்லியன் முறைகள் அமைக்கப் பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.
  • மரபணுக்களை வரிசைப்படுத்துதல் என்பது நான்கு எழுத்துக்களின் துல்லியமான வரிசையையும் அவை குரோமோசோம்களில் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தீர்மானிக்கப் பயன்படும் ஒரு முறையாகும்.
  • பல்வேறு தனிப்பட்ட மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம் மரபணு மட்டத்தில் மனிதனின் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்ள மற்றும் சில நோய்களுக்கு நாம் எவ்வளவு ஆளாகிறோம் என்பதை அறிய அது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்