பான்ட்ரான்ஸ்கிரிப்டோம் என்பது டிரான்ஸ்கிரிப்டோம் (உயிர்மக் குறிப்பு) மற்றும் மரபணுத் தொகை ஆகியவற்றின் கலவையாகும்.
இது ஒற்றை நேரியல் இழைக்குப் பதிலாக பல்வேறு நபர்களின் குழுவினைச் சேர்ந்த மரபணுப் பொருளைக் கொண்டுள்ளது.
RNAவினுடைய மிகவும் பொதுவான செயல்பாட்டு DNAவை புரதங்களாக மாற்றச் செய்வதாகும்.
ஆனால் இது பெரும்பாலான RNA, புரதங்களை உருவாக்கவில்லை என்பதை தற்போது அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ள நிலையில் இதற்கு மாறாக செல் கட்டமைப்பில் தாக்கம் உருவாக்குதல் அல்லது மரபணுக்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சில பணிகளை இவற்றினால் மேற்கொள்ள இயலும்.
முழு RNA கட்டமைப்பும் டிரான்ஸ்கிரிப்டோம் என்று அழைக்கப்படுகிறது.
பான்ட்ரான்ஸ்கிரிப்டோம் என்ற கருத்தாக்கமானது, மரபியல் துறையில் "மரபணுத் தொகை" என்ற அதிகரித்து வரும் கருத்தாக்கத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.
ஒரு மரபணுத் தொகையைப் பயன்படுத்துவதால், ஒரு நபரின் மரபணுவை ஒரே நேரத்தில் மரபணு ரீதியாக வேறுபட்ட, பல்வேறு உயிர் புவியியல் சார்ந்த வம்சாவளியினைச் சேர்ந்த நபர்களிடமிருந்துப் பெறப்பட்ட பல்வேறு மரபணுக் குறிப்புகளுடன் ஒப்பிட ஆராய்ச்சியாளர்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.