TNPSC Thervupettagam

பான்னி புல்வெளிகளில் மேய்ப்பர்களுக்கான உரிமைக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆதரவு

May 27 , 2021 1152 days 558 0
  • சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பான்னி புல்வெளிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பிற்கு எதிராக மல்தாரி சமூகத்தினர் வழக்குத் தொடுத்தனர்.
  • 6 மாதத்திற்குள் குஜராத்தின் பான்னி புல்வெளிகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
  • மேலும் ஒரு மாதத்திற்குள் இதற்கான செயல்திட்டத்தைத் தயார் செய்யுமாறும் இணைக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டு  வன உரிமைகள் சட்டத்தின் பிரிவு 3 என்ற பிரிவின் படி பான்னி புல்வெளிப் பகுதிகளில் சமூகக் காடுகளைப் பாதுகாப்பதற்காக மல்தாரி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையானது தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
  • மல்தாரி சமூகத்தினர் இந்தியாவின் குஜராத் பகுதியில் வாழும் பழங்குடியின கால்நடை வளர்ப்புச் சமூகத்தினர் ஆவர்.
  • மல்தாரி சமூகத்தினர் பான்னி வகை எருமைகளை வளர்க்கின்றனர்.
  • பான்னி எருமைகள் இந்தப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு உள்ளூர் இனம் ஆகும் (endemic).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்