பான்னி புல்வெளியில் சிவிங்கிப் புலிகளின் இனப்பெருக்க மையத்தினை அமைக்கச் செய்வதற்கான ஒரு திட்டத்தினை குஜராத் மாநில அரசு தயாரித்துள்ளது.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 2,500 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பான்னி புல்வெளி இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய புல்வெளிகளில் ஒன்றாகும்.
இந்தப் பாதுகாக்கப்பட்ட காடு ஆனது, பிரபலமான பான்னி இன எருமைகளுக்கு மிகப் பெயர் பெற்றது.
40 வகையான புல் மற்றும் 99 வகையான பூக்கும் தாவர இனங்களோடு, இங்கு 273 பறவை இனங்களும் உள்ளன.