உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவத்தக்க சீர்வேக கப்பல் ஏவுகணையான (Indigenously developed Submarine Launched version of Cruise Missile-SLCM) பாபர்-3 ஏவுகணையை (BABURMissile) பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பாபர் – 3 ஏவுகணையானது பல்வேறு வகையான ஆயுதங்களை சுமந்து சென்று விநியோகிக்க வல்லதாகும். இது நீருக்கடியிலான கட்டுப்படுத்தப்பட்ட உந்துதல் அமைப்பை (Underwater controlled propulsion) பயன்படுத்துகின்றது.
அரபிக் கடலில் பாகிஸ்தானினுடைய கடற்பகுதியின் நீருக்கடியிலான நிலையில்லா நகரும் ஏவு மேடையிலிருந்து (Underwater Dynamic Platform) இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. பொது வெளியில் புலப்படாத இடத்தில் பொருத்தப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை தாக்கி அழித்தது.
நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவவல்ல இந்த பாபர்-III ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது இது இரண்டாவது முறை மட்டுமேயாகும். இதற்கு முன் இதனுடைய முதல் சோதனை 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்டது.