TNPSC Thervupettagam

பாப்பாத்தி சோலை

December 26 , 2023 206 days 249 0
  • சின்னக்கனலில் உள்ள சுமார் 364.5 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தைக் காப்புக் காடுகளாக அறிவிக்கும் ஒரு திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
  • அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளுக்கு மிகவும் ஒரு புகழ் பெற்ற பாப்பாத்தி சோலைப் பகுதியின் பெயர் வண்ணத்துப்பூச்சிகள் என்று பொருள்படும் பாப்பாத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
  • பாப்பாத்தி என்றால் வண்ணத்துப் பூச்சி என்றும், சோலை என்றால் சோலை நிலம் என்று பொருள்படும்.
  • தமிழ்நாட்டின் மழை மறைவுக் காடுகளிலிருந்து மூணாரின் உயரமான பகுதிகளுக்கு இடம் பெயரும் போது பல வண்ணத்துப் பூச்சிகள் இப்பகுதியை வந்தடைகின்றன.
  • பாப்பாத்தி சோலைப் பகுதி, பல வகை தைலம் (இம்பேடியன்ஸ் பால்சமினா) மற்றும் அரிய வகை மல்லிகை மலர்கள் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
  • இது சதுரங்கப்பாரா மலைகளுக்கும் மதிகெட்டான் சோலை பகுதிக்கும் நடுவில் அமைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர் பூத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்