பாம்பனில் உள்ள குந்துக்காலுக்கும், மன்னார் வளைகுடாவில் உள்ள வேதாளைக்கும் இடையில் உள்ள 10 கி.மீ தொலைவுள்ள கடற்கரையானது பச்சை நிறமாகி மிகப்பெரிய மீன் இறப்புகளைக் கண்டுள்ளது.
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது அங்கு சோதனைகளை நடத்தி, அங்கு ‘நாக்டிலுகா கடல் நுண்பாசிகள்’ திடீரென பெருகியது இந்த நிகழ்விற்குக் காரணம் என்று முடிவு செய்தது.
கடல் நீரில் உள்ள அதிக வெப்பநிலை மற்றும் நல்ல கரிம நிலைமைகள் ஆனது, ‘பச்சைப் பாசிகள்’ இனப்பெருக்கம் செய்வதற்கும் சிதல்களை விடுவிப்பதற்கும் உகந்த சூழலை வழங்கியிருந்தன.
மீன்கள் ‘செவுள் மூச்சுத் திணறல்’ காரணமாக அங்கு இறந்துவிட்டன. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவை இறந்துவிட்டன.