TNPSC Thervupettagam

பாம்புக் கடியினால் ஏற்படும் இறப்பு

July 15 , 2020 1503 days 619 0
  • இந்தியாவானது 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுக் காலகட்டத்தில் 1.2 மில்லியன் அளவிற்குப் பாம்புக் கடியினால் ஏற்படும் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பானது பாம்புக் கடியை முன்னுரிமை அடிப்படையிலான ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக அங்கீகரித்துள்ளது.
  • இதன் மூலம் ஏற்படும் 70% இறப்புகள் உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் குறைந்த உயரம் கொண்ட சமவெளிப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளது.
  • வருடாந்திர அளவில் பாம்புக்கடி மரணங்கள் அதிக அளவில் ஏற்படுவது உத்தரப் பிரதேசம் (8700), ஆந்திரப் பிரதேசம் (5200) மற்றும் பீகார் (4500) ஆகிய மாநிலங்களில் ஆகும்.
  • பெரும்பாலும் விஷக்கடி நிகழ்வுகள் கண்ணாடி விரியன், கட்டு விரியன் மற்றும் நாகப் பாம்பு போன்ற பாம்பு வகைகளினால் நிகழ்கின்றன.
  • விஷக்கடி நிகழ்வுகள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் பெண்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்களுக்கும் 15 முதல் 29 வயது கொண்ட மக்கள் பிரிவினருக்கும் அதிகமாக ஏற்படுகின்றது.
  • இது “இந்தியாவில் பாம்புக் கடியினால் ஏற்படும் இறப்புகள் : தேசியப் பிரதிநிதித்துவம் கொண்ட இறப்புகள் குறித்த ஒரு ஆய்வு” என்ற அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இது கனடாவில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்