TNPSC Thervupettagam

பாம்ப் புயல் - குளிர்காலப் புயல்

December 29 , 2022 571 days 293 0
  • ஒரு அதிதீவிர குளிர்காலப் புயலானது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த அளவு பதிவினை நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் பெரும்பகுதியை தாக்கி, பனிப் புயல், உறைபனி மழை, வெள்ளம் மற்றும் கடுமையான குளிர் ஆகியவற்றினை ஏற்படுத்தியுள்ளது.
  • குறை அழுத்தக் காற்றுப் பகுதியானது, உயர் அழுத்தக் காற்றுடன் மோதும் போது புயல்கள் உருவாகின்றன.
  • இதில் காற்று என்பது உயர் அழுத்தத்திலிருந்து குறை அழுத்தப் பகுதியை நோக்கி நகரும் போது காற்று ஓட்டம் உருவாகிறது.
  • ஒரு பாம்ப் புயல் என்பது குறைந்த காற்றழுத்தப் பகுதியில் உள்ள அழுத்தம் எவ்வளவு விரைவாக குறைகிறது (24 மணி நேரத்தில் குறைந்தது 24 மில்லி பார்கள் அழுத்தத்தில்) என்பதனைப் பொறுத்து வரையறுக்கப்படுகிறது.
  • இது இரண்டு காற்று அழுத்தப் பகுதிகளுக்கு இடையே உள்ள அழுத்த வேறுபாட்டை விரைவாக அதிகரித்து காற்றின் வலிமையை அதிகரிக்கிறது.
  • இவ்வாறு காற்று அதி தீவிரமடையும் நிகழ்வானது பாம்போஜெனீசிஸ் (விரைவு வீழ்ச்சி) என்று அழைக்கப்படுகிறது.
  • வட அரைக் கோளத்தில், காற்று சுழலும் திசை மேற்புறத்திலிருந்து நோக்கும் போது இடஞ்சுழி திசையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்