'எர்னி பாட்' எனப்படும் தனது சொந்த ChatGPT-பாணியிலான செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருளின் உள்ளியக்கச் சோதனையை நிறைவு செய்ய உள்ளதாக சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பாய்டு தெரிவித்துள்ளது.
எர்னி என்பது "தகவல் ஒருங்கிணைப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட உரை" என்பதன் ஒரு சுருக்கமாகும்.
இது 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மாதிரியாகும்.