TNPSC Thervupettagam

பாரத ரத்னா 2024

February 13 , 2024 289 days 714 0
  • முன்னாள் பிரதமர்கள் P.V. நரசிம்மராவ் மற்றும் செளத்ரி சரண் சிங், வேளாண் அறிவியலாளர் M.S. சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வுள்ளது.
  • முன்னதாக, பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோருக்கு இந்தியாவின் உயரியக் குடிமை விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள ஐந்து விருதுகள் ஆனது 1999 ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட நான்கு விருதுகள் என்ற எண்ணிக்கையினை ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகள் என்ற வகையில் விஞ்சி உள்ளது.
  • அத்வானி அவர்கள் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.
  • தெலுங்கு தலைவர் P.V. நரசிம்ம ராவ்  அவர்கள், 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
  • பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்ததற்காக பெருமளவில் புகழப்படுகிறார்.
  • மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் அவர்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலனில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக புகழ் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்