TNPSC Thervupettagam
January 26 , 2024 157 days 312 0
  • பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர், நாட்டின் உயரியக் குடிமை விருதான பாரத ரத்னாவுக்கு (மரணத்திற்குப் பின்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டார்.
  • சுதந்திர இந்தியாவில், 1952 ஆம் ஆண்டில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1952 ஆம் ஆண்டில் அவர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட போது, ஆஸ்திரிய நாட்டிற்கான அதிகாரப்பூர்வ தூதுக்குழுவில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1977 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட அவர், 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலச் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதும், 1988 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார்.
  • தாக்கூர் 1967 ஆம் ஆண்டு மார்ச் 05 முதல் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை பீகார் மாநில கல்வி அமைச்சராக இருந்தார்.
  • அவர் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் மூலம் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாநிலத்தின் முதலமைச்சரானார், ஆனால் அவரது அரசாங்கம் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீழ்ச்சியடைந்தது.
  • அவர் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் பதவிக்கு வந்தார், ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளில் அவர் அதிகாரத்தை இழந்ததால் அவரது முழு பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை.
  • 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், பீகார் மாநில அரசாங்கம் முங்கேரி லால் என்ற ஆணையத்தினை நியமித்தது.
  • 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான அதன் அறிக்கையானது, 128 "பிற்படுத்தப்பட்ட" சமூகங்களை பட்டியலிட்ட நிலையில் அவற்றில் 94 சமூகங்கள் "மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவுகள்" என அடையாளம் காணப்பட்டது.
  • தாகூர் அரசு ஆனது இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியது.
  • ‘கர்பூரி தாகூர் சூத்திரம்’ ஆனது 26% இடஒதுக்கீட்டை வழங்கியது.
  • இதில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12% பங்கும், அவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 3 சதவீதமும், "உயர் சாதிப் பிரிவினைச்" சேர்ந்த ஏழைகளுக்கு 3 சதவீதமும் வழங்கப் பட்டது.
  • இதன் காரணமாக அவரது அரசாங்கம் வீழ்ச்சியுற்றது என்பதோடு, இதனால் அவர் உயர் சாதியினரின் பெரும் எதிர்ப்பினை எதிர்கொள்ள நேர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்