புதுடெல்லியில் நடைபெற்ற உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மன்ற (BRIC) சங்கத்தின் தொடக்க நிகழ்விற்கான கூட்டத்தில், இந்தியாவிற்கான “உயிர் பார்வை”என்பதினை வரையறுக்க வேண்டியதன் அவசியமானது வலியுறுத்தப் பட்டது.
உயிரித் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 14 சிறந்த அறிவியல் தன்னாட்சி நிறுவனங்களை ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தின் கீழ் BRIC கொண்டுவருகிறது.
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் (DBT) கீழ் இயங்கும் ஒரு உச்ச பட்ச தன்னாட்சிச் சங்கமாகும்.
இக்கூட்டத்தில் பூஜஜிய கழிவுகளுக்கான பசுமையான சுத்தமான வாழ்க்கை முறையினை வளாகத்திற்குள் கொண்டு வருவதற்கான திட்டமும் தொடங்கப்பட்டது.
iBric (BRIC அமைப்பின் நிறுவனங்கள்) அமைப்பு 6வது ‘R’- “ஆராய்ச்சி நுண்ணறிவு”மூலம் 5 R பூஜ்ஜியக் கழிவுகளை வலுப்படுத்தும்.
5 Rகள் என்பது ‘மறுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுபயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல்’ஆகியனவாகும்.
இந்த முயற்சியானது சுற்றுச்சுழலுக்கான வாழ்க்கை முறை என்ற திட்டத்தின் இயக்கத்துடன் ஒத்துப் போகிறது.