சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த குழுவானது, ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து வடிவினை உருவாக்கி, அதற்கு பாரதி எழுத்து வடிவம் என்று பெயரிட்டுள்ளது.
பன்மொழி ஒளியிழை எழுத்துணரி (OCR) திட்டத்தைப் பயன்படுத்தி பாரதி எழுத்து வடிவில் உள்ள ஆவணங்களைப் படிக்கும் முறையை இது உருவாக்கியுள்ளது.
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சைகை மொழியை உருவாக்கப் பயன்படும் விரல்-எழுத்துக் கூட்டு முறையையும் இக்குழு உருவாக்கியுள்ளது.
இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்கள் தேவநகரி, வங்காளம், குர்முகி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகியானவாகும்.
இதில் ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகள் இதுவரையில் ஒருங்கிணைக்கப் பட வில்லை.
ஒளியிழை எழுத்துணரித் திட்டங்களில் முதலில் ஆவணத்தை உரை சார்ந்த மற்றும் உரை சாராத ஆவணங்களாகப் பிரிப்பது (அல்லது வகைப்படுத்துவது) ஆகிய செயல் முறைகள் அடங்கும்.