TNPSC Thervupettagam

பாரதி எழுத்து வடிவம்

October 11 , 2023 283 days 388 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த குழுவானது, ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து வடிவினை உருவாக்கி, அதற்கு பாரதி எழுத்து வடிவம் என்று பெயரிட்டுள்ளது.
  • பன்மொழி ஒளியிழை எழுத்துணரி (OCR) திட்டத்தைப் பயன்படுத்தி பாரதி எழுத்து வடிவில் உள்ள ஆவணங்களைப் படிக்கும் முறையை இது உருவாக்கியுள்ளது.
  • செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சைகை மொழியை உருவாக்கப் பயன்படும் விரல்-எழுத்துக் கூட்டு முறையையும் இக்குழு உருவாக்கியுள்ளது.
  • இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்கள் தேவநகரி, வங்காளம், குர்முகி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகியானவாகும்.
  • இதில் ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகள் இதுவரையில் ஒருங்கிணைக்கப் பட வில்லை.
  • ஒளியிழை எழுத்துணரித் திட்டங்களில் முதலில் ஆவணத்தை உரை சார்ந்த மற்றும் உரை சாராத ஆவணங்களாகப் பிரிப்பது (அல்லது வகைப்படுத்துவது) ஆகிய செயல் முறைகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்