09.08.2024 அன்று மக்களவையிலும், 05.12.2024 அன்று மாநிலங்களவையிலும் பாரதிய வாயுயான் ஆதினியம் 2024 நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று, மேற்கூறப் பட்ட சட்டத்தின் விதிகள் அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டம் சார்ந்த சீர்திருத்தமானது, தற்காலத் தேவைகள் மற்றும் உலகளாவியத் தரநிலைகளுக்கு ஏற்ப, 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்தினை மீண்டும் மீளியற்றம் செய்வதன் மூலம் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை மிகவும் நவீன மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, இயக்கம், விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் அது தொடர்பான விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான விதிமுறைகளை இந்தச் சட்டம் வழங்குகிறது.
மிகைப் பணிநீக்கங்களை அகற்றியுள்ள இந்தச் சட்டம் ஆனது, 21 முறை திருத்தப்பட்ட 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்திற்கான ஒரு மாற்றாக அமைந்தது.