TNPSC Thervupettagam

பாரதிய வாயுயான் விதேயக் 2024

December 11 , 2024 17 days 87 0
  • விமானப் போக்குவரத்துத் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக என்று 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்திற்குப் பதிலாக பாராளுமன்றம் ஒரு புது மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
  • மிகை பணிநீக்கங்களை அகற்றுவதற்காக 21 முறை திருத்தப்பட்ட 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்தினை மாற்றியமைக்கவும் இந்த மசோதா முயல்கிறது.
  • சர்வதேசத் தரநிலைகளுடன் ஒன்றிய வகையிலான பாதுகாப்பு, ஒழுங்குமுறை மேற் பார்வை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தப் புது மசோதா கவனம் செலுத்துகிறது.
  • இந்த மசோதா விமானத் தயாரிப்பில் தன்னிறைவை ஊக்குவிப்பதோடு, முதலீட்டை ஊக்குவிக்கிறது மற்றும் பொது விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுகிறது.
  • இதுவரையில் தொலைத்தொடர்புத் துறையால் நடத்தப்பட்ட உரிமம் வழங்கும் செயல் முறையானது தற்போது மத்திய பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தினால் நிர்வகிக்கப் படும்.
  • விமானப் பணியாளர்கள் அனைவரும் தங்களின் அனைத்து தரச் சான்றிதழ்களையும் ஒரு அலுவலகத்திடம் இருந்து பெற முடியும் என்பதால் இது ஒற்றைச் சாளர அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையை உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்