TNPSC Thervupettagam

பாரதியார் பல்கலைக்கழகம் – இரண்டு காப்புரிமைகள்

July 19 , 2021 1132 days 527 0
  • பாரதியார் பல்கலைக் கழகமானது இரண்டு செயல் முறைகளுக்காக வேண்டி  காப்புரிமையினைப் பெற்றுள்ளது.  அவை,
    • திடக்கழிவுகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும்
    • நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்க ஒரு பழ மரத்தை (fruit tree) பயன்படுத்துதல்  
  • முதல் காப்புரிமையானது துணைப் பேராசிரியர் K. இராமச்சந்திரன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் R. சரவணக் குமார் மற்றும் P.V. ஆனந்த பத்மநாபன் ஆகியோரால் உருவாக்கப்பட்டஉலோகங்களுடன் கூடிய திடக்கழிவுகளிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்என்ற முறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது காப்புரிமையானது நீரிழிவு நோயைக் குணப்படுத்த சிசைஜியம் முன்டகம் (Syzygium mundagam - காட்டு நாவல் பழமரம்) எனும் பழத்தினைப் பயன்படுத்தும் முறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் T. பரிமேலழகன் மற்றும் ஆராய்ச்சியாளர் ராகுல் சந்திரன் உள்ளிட்டக் குழுவானது இந்தப் பழ மரம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் பட்டைகளிலிருந்து சில செயல்மிகு மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து அதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்