TNPSC Thervupettagam

பாரதீய சாக்சய மசோதா 2023

August 18 , 2023 339 days 227 0
  • இந்த மசோதாவானது, வழக்கற்றுப் போன 1872 ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டத்தினை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அந்தச் சட்டத்தின் 23 விதிகளை மாற்றியமைத்ததோடு, மேலும் ஒரு புதிய விதியை அதில் அறிமுகப் படுத்தியுள்ள நிலையில், அவற்றோடுச் சேர்த்து இந்த மசோதாவில் மொத்தம் 170 சட்டப் பிரிவுகள் உள்ளன.
  • இந்தப் புதிய மசோதாவானது, மின்னணு அல்லது எண்ணிமப் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.
  • இந்த மசோதாவானது இரண்டாம் நிலை ஆதாரங்களின் (அசலான சில ஆதாரங்களில் இருந்து தருவிக்கப்பட்டவை) வரம்பினை விரிவுபடுத்துகிறது.
  • இது குற்றவியல் வழக்குகளின் விசாரணையின் போது சாட்சியங்களைக் கையாளச் செய்வதற்கான துல்லியமான மற்றும் சீரான விதிகளை நிறுவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்