TNPSC Thervupettagam

பாரத் பற்றுச்சீட்டு செலுத்து அமைப்பு

July 30 , 2017 2528 days 924 0
  • தேசியப்பணம் செலுத்து நிறுவனமானது (National Payments Corporation of India - NPCI) , மத்திய பாரத் பற்றுச்சீட்டு செலுத்துப்பிரிவாக (Bharat Bill Payment Central Unit - BBPCU) இயங்கவும், பாரத் பற்றுச்சீட்டு செலுத்து அமைப்பை (BBPS) அதிகாரப்பூர்வமாக செயல்முறைப்படுத்தவும் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது .
  • மின்சாரம், தொலைத்தொடர்பு, டிடிஹெச், குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு போன்ற 45 கோடி பற்றுச்சீட்டுகளை BBPS மூலம் செலுத்த முடியும் . நாட்டில் டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்தும் பழக்கத்தை இந்த அமைப்பு பெரிதும் ஊக்கப்படுத்தும். மேலும், பற்றுச்சீட்டு செலுத்தும் முறைகளை முறைப்படுத்த இந்த முயற்சி உதவும் .
  • கடந்த ஆகஸ்ட் மாதம் , ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தபின் , முதல்கட்டமாக 8 BBPS அலகுகள் நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒருவருட சோதனைக்குப் பிறகு , தற்போது இறுதி கட்டமாக முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தற்பொழுது,தேசியப்பணம் செலுத்துநிறுவனம் (NPCI) சான்றளித்து அங்கீகரித்துள்ள மொத்த மத்திய பாரத் பற்றுச்சீட்டு செலுத்துப்பிரிவுகளின் (BBPOU) எண்ணிக்கை 24 ஆகும்.
  • சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் : மூன்று பொதுத்துறை வங்கிகள் - Bank of Baroda, Union Bank of India and Indian Overseas Bank ; 10 தனியார் கடன் நிறுவனங்கள்; 5 கூட்டுறவு வங்கிகள் மற்றும் 6 வங்கியல்லா பற்றுச்சீட்டு தொகுப்பு நிறுவனங்கள் (non-bank biller aggregators).
  • BBPS - இல் பெருமளவான செலுத்து பரிவர்த்தனைகள் மின்சாரத்துறையில் நடைபெறுகின்றன. நாட்டின் அதிகமான பற்றுச்சீட்டுகள் மின்சாரத் துறையில் உருவாகின்றன (மாதம்சுமார்18 கோடிப் பற்றுச்சீட்டுகள்). இதில் வெறும் 10 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்