இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சியை முற்றிலும் மாற்றியமைப்பதற்காக வேண்டி அதன் முதல் வகையிலான புற்றுநோய் மரபணு தரவுத்தளமான பாரத் புற்றுநோய் மரபணு தரவுத்தொகுப்பினை (BCGA) சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது அறிமுகப்படுத்தியுள்ளது.
480 மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்புள்ள நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட திசு மாதிரிகளிலிருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட 960 முழு எக்ஸோம் (மரபணுவின் முழுமையான குறியீட்டுப் பகுதி) வரிசை முறை பற்றிய தரவு இதில் உள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் சார்ந்த உயிரிக் குறிப்பான்களை அடையாளம் காண இந்த தரவுத் தளம் ஒரு விலைமதிப்பற்ற வளமாக இருக்கும் என்பதோடு இது மார்பகப் புற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும்.