TNPSC Thervupettagam

பாரத் பெட்ரோலியம் - 8வது மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்வு

September 9 , 2017 2671 days 961 0
  • அரசால் நடத்தப்படும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மஹாரத்னா நிறுவனமாக மாற உள்ளது. இது தற்பொழுது நவரத்னா நிறுவனமாக உள்ளது.
  • இதனை மஹாரத்னா நிறுவனம் என்ற தரத்திற்கு உயர்த்தும் முடிவு அமைச்சரவை செயலாளர் தலைமையில் உள்ள குழுவால் எடுக்கப்பட்டது.
மஹாரத்னா நிலை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள்
  • இது நவரத்னா நிறுவனமாக இருக்க வேண்டும்.
  • இது பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டிருத்தல் வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் சராசரி ஆண்டு விற்றுமுதல் 25000 கோடிகளாக இருத்தல் வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் சராசரி ஆண்டு நிகர மதிப்பு 15000 கோடிகளாக இருத்தல் வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் வரிக்குப் பிந்தைய இலாபம் சராசரியாக ஆண்டிற்கு 5000 கோடிகளுக்கு மேற்பட்டு இருத்தல் அவசியமாகும்.
  • இது உலகஅளவில் முன்னிலையில் இருக்க வேண்டும்.
தற்சமயம் ஏழு மஹாரத்னா நிறுவனங்கள் உள்ளன.
  1. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
  2. கோல் இந்தியா
  3. கெயில் இந்தியா (GAIL India)
  4. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
  5. என்டிபிசி - NTPC
  6. ஓன்ஜிசி - ONGC
  7. செயில் - SAIL
மஹாரத்னா நிறுவனமாக மாறிய பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தனது நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய வசதியாக பாரத் பெட்ரோலியத்தின் உயர்மட்டக் குழு மேம்படுத்தப்பட்ட அதிகாரங்களை அடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்