TNPSC Thervupettagam

பாரத் ஸ்டேட் வங்கியின் ஈகோராப் அறிக்கை

July 30 , 2023 483 days 293 0
  • SBI ஈகோராப் எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் அறிக்கையானது, 2028 ஆம் நிதியாண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற ஒரு அடையாளத்தை இந்தியா பெற வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளது.
  • தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் படி, 2027 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் இந்தியா விஞ்ச வேண்டும்.
  • 2022-2027 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் பதிவாகி வரும் பொருளாதார வளர்ச்சி ஆனது, ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தின் தற்போதைய அளவை விட 1.8 டிரில்லியன் டாலர் அதிகமாகும்.
  • ஒவ்வொரு 2 வருடங்களுக்கும், இந்தியாவானது தனது பொருளாதார மதிப்பீட்டில் 0.75 டிரில்லியன் டாலர் வளர்ச்சியினை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 20 டிரில்லியன் டாலர் மதிப்பினை எட்டும் என்பதை இது குறிக்கிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 2027 ஆம் ஆண்டில் (அல்லது 2028 ஆம் நிதியாண்டில்) 500 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்