பாரத ஸ்டேட் வங்கியானது, SBI அறக்கட்டளையின் கிராம சேவைத் திட்டத்தை இந்தியாவின் ஆறு மாநிலங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ‘பாரத் ஸ்டேட் வங்கியின் கிராமச் சேவை’ திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 30 தொலைதூர கிராமங்களை கொண்டு வர உள்ளது.
ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள உயர் இலட்சியமிக்க மாவட்டங்களில் உள்ள தொலைதூர கிராமங்களை வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது.