TNPSC Thervupettagam

பாரத்நெட் (BharatNet)

July 20 , 2017 2685 days 1510 0
  • திருத்தப்பட்ட செயலாக்க உத்தியின் நோக்கம் மார்ச், 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகலக்கற்றை இணைப்பு (Broadband Connection) அளிப்பதாகும் .
  • இந்தத் திட்டத்தின் முதல்    கட்டத்தில்            நிலத்தடி              ஒளியிழைகள் (OFC) பயன்படுத்தி இணையதள இணைப்பு அளிக்கப்பட்டது .
  • தற்போது இரண்டாம் கட்டத்தில் நிலத்தடி ஒளியிழைகள், கம்பங்கள் வழி ஒளியிழைகள், ரேடியோ அலைகள், மற்றும் செயற்கைக்கோள் வழியாக மீதமுள்ள கிராமங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படவுள்ளது.
  • பாரத்நெட்
  • பாரத்நெட் என்பது கிராமங்களுக்கு இணைய இணைப்பு (Internet Connectivity) வழங்கும் மத்திய அரசின் திட்டம் ஆகும் . இதனை பாரத அகலக்கற்றை வலையமைப்பு நிறுவனம் (Bharat Broadband Network Limited - BBNL) செயல்படுத்தி வருகிறது.
  • ஒளியிழைக் கொண்டு செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய கிராமப்புற இணைய இணைப்புத் திட்டம் இதுவாகும்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் , குறிப்பாக கிராமப்புற இல்லங்களுக்கு, 2 Mbps முதல் 20 Mbps வேகம் வரையிலான அகலக்கற்றை
  • இணைய இணைப்புகளை தேவைக்கேற்ப வழங்குவது பாரத்நெட்டின் நோக்கம் ஆகும்.
  • பாரத்நெட்டின் மூன்று கட்ட செயலாக்க திட்டம் பின்வருமாறு :
    • முதல் கட்டமாக 2017 மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிலத்தடி ஒளியிழைகள் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படுதல்.
    • இரண்டாம் கட்டமாக 2017 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து 2,50,500 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணையதள இணைப்பு வழங்கப்படுதல்.
    • மூன்றாம் கட்டமாக, 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையில் அனைத்து மாவட்டங்களையும் , தொகுதிகளையும் ஒளியிழைகள் கொண்டு இணைக்கும் வகையில் நவீன வலை அமைப்பு உருவாக்கப்படும் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்