பாரத்பே நிறுவனமானது “12% club”எனப்படும் செயலி ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது 12% வருடாந்திர வட்டி வீதம் வரை முதலீடு செய்யவும் மற்றும் வருமானம் ஈட்டவும் அல்லது அதே வீதத்தில் கடன் பெறவும் வாடிக்கையாளர்களுக்கு வழி வகை செய்கிறது.
இந்தச் செயலிக்காகவும் கடன் வழங்கு ஏற்பாடுகளுக்காகவும் வேண்டி பாரத்பே நிறுவனம் லென்டென்கிளப் (LenDenClub) என்ற ஒரு நிறுவனத்துடன் (இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிதியியல் நிறுவனம்) கைகோர்த்து உள்ளது.
வாடிக்கையாளர்கள் 12% Club செயலியில் கடன் வழங்குதலை தேர்வு செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அதில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்யலாம்.
இது தவிர, 12% Club செயலியில் 3 மாத காலத்திற்கு ரூ.10 லட்சம் வரை பிணையற்றக் கடன்களை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.