பாரம்பரிய மின் திரையரங்கம் அருங்காட்சியகமாக மாற்றம்
November 27 , 2018
2191 days
720
- அண்ணா சாலை தலைமை தபால் அலுவலக வளாகத்தில் உள்ள பாரம்பரிய மின் திரையரங்கானது விரைவில் தபால் தலை சேகரிப்பு அருங்காட்சியகமாக மாறவுள்ளது.
- புது டெல்லியிலும் ஆக்ராவிலும் இதைப் போன்ற அருங்காட்சியகங்களை இயக்கும் இந்திய அஞ்சல் துறையால் முதல்முறையாக இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவிருக்கிறது.
- இது நாட்டின் பழமையான தபால் தலைகள் மற்றும் நாட்டின் சில தலைசிறந்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் தபால் தலைகளைக் கொண்டிருக்கும்.
- 1913-ல் மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணா சாலையில் நிறுவப்பட்ட இந்த மின் திரையரங்கானது மௌன மொழிப் படங்களை திரையிட்ட முதல் திரையரங்கு ஆகும்.
- தற்போது இந்த திரையரங்கானது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கருப்பொருளுடன் நிரந்தரமான தபால்தலை கண்காட்சியை நடத்துகின்றது.
Post Views:
720