TNPSC Thervupettagam

பாரம்பரியத் தளங்களை ஏற்றுக் கொள்தல் 2.0 திட்டம்

September 5 , 2023 321 days 198 0
  • இந்திய தொல்லியல் துறையானது (ASI), பாரம்பரியத் தளங்களை தத்தெடுத்து ஏற்றுக் கொள்தல் 2.0 எனப்படும் புதுமைமிக்க திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • நாடு முழுவதும் காணப்படும் 3,600க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி பெருநிறுவனப் பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியத்தினைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வரலாற்றுத் தளங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக என்று, பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதியைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியத் தொல்லியல் துறை பெருநிறுவனப் பங்குதாரர்களை ஊக்குவிக்கும்.
  • ஆர்வமுள்ள பங்குதாரர்கள் அதற்கான இணைய தளம் மூலமாக ஒரு நினைவுச் சின்னம் முழுவதினுடைய அல்லது குறிப்பிட்ட வசதிகளுக்கான பொறுப்பினை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்