பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆனது, 'பாரம்பரியத் தளங்களை தத்தெடுத்தல் 2.0 திட்டத்தின்' கீழ், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்துடன் (ASI) இணைந்து ஓர் உத்தி சார் கூட்டாண்மையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தச் சங்கமானது, நிலையான ஒரு நீர் மேலாண்மையுடன் பாரம்பரியத் தளங்களின் பாதுகாப்பு திட்டத்தினை இணைப்பதில் ஒரு முக்கிய படி நிலையைக் குறிக்கிறது.
பிஸ்லெரி CSR முன்னெடுப்பான 'நயி உமீத்' ஆனது, ராஜஸ்தானின் அபானேரியில் உள்ள சந்த் பாவோரி, நீம்ரானாவில் உள்ள பாவோரி, இரந்தம்பூர் கோட்டையில் உள்ள பத்மா மற்றும் இராணி தலாப்கள் மற்றும் காலிஞ்சர் கோட்டையில் உள்ள புத்த புத்தி குளம் ஆகிய நான்கு மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலைகளை ஏற்றுப் பராமரிக்க உள்ளது.