மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கான கருத்துருப் பாடலை புதுடெல்லியில் வெளியிட்டார்.
இந்தப் பாடலுக்கு “கர் தே கமல் தூ” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை இயக்கிப் பாடியவர் சஞ்சீவ் சிங் ஆவார்.
இவர் லக்னோவைச் சேர்ந்த திவ்யாங்க் கிரிக்கெட் வீரராவார்.
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 9 விளையாட்டுத் துறைகளில் 54 பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.