TNPSC Thervupettagam

பாரா – பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப்

November 30 , 2017 2580 days 919 0
  • தென் கொரியாவின் உல்சான் நகரில் நடைபெற்ற உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (Badminton World Federation) பாரா – பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இரு தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
  • பெண்களுக்கான ஒற்றையர் Standing Lower (SL-3) பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பருல் பர்மார் தங்கம் வென்றுள்ளார்.
  • இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை பருல் பர்மார் ஜப்பானின் அகிகோ சுகினோவுடன் சேர்ந்து சீன இரட்டையர் அணியை வீழ்த்தி  தங்கம் வென்றுள்ளார்.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் தருண் தில்லான் மற்றும் மனோஜ் சங்கர் முறையே SL4 மற்றும் SL3 பிரிவில் வெள்ளி வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்