TNPSC Thervupettagam

பாராலிதெரிசினோசொரஸ் ஜபோனிகஸ்

June 15 , 2022 766 days 425 0
  • மேலே கூறப்பட்ட இந்த உயிரினமானது 66 மில்லியன் ஆண்டுகள் முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்ததாக ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • இது இரு கால்கள் கொண்ட ஒரு டைனோசர் இனமாகும்.
  • ஜப்பானின் வடக்குத் தீவான ஹொக்கைடோவில் கண்டுபிடிக்கப்பட்டப் புதை படிவங்களிலிருந்து இது அடையாளம் காணப்பட்டது.
  • ஆசியாவில் முதன்முறையாக கடல் படிவுகளில் இருந்து கண்டறியப்பட்ட முதல் புதை படிவம் இதுவாகும்.
  • இரு கால் மற்றும் முதன்மையாக தாவரங்களை உண்ணுகின்ற மூன்று விரல்கள் கொண்ட இந்த டைனோசர்கள் தெரிசினோசர்கள் எனப்படும் ஒரு குழுவைச் சேர்ந்தவையாகும்.
  • இந்த இனத்தின் மிகவும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவை வாள் போன்ற நகங்களைக் கொண்டிருந்தன என்பதேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்