பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு
March 28 , 2025 5 days 40 0
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் (பின்னோக்கிய தேதியில்) அமலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் அவர் ஓய்வூதியங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ஆனது, தற்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக 2,000 ரூபாயாக இருந்த தினப்படி ஆனது 2,500 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப் படும் ஓய்வூதியம் ஆனது, தற்போது 25,000 ரூபாயில் இருந்து 31,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய நபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டிற்கும் வழங்கப் படும் கூடுதல் ஓய்வூதியம் 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டிற்கு 34 இலவச உள்நாட்டு விமானப் பயணங்களையும், தொழில்முறை மற்றும் தனிப்பட்டப் பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் வேண்டி முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒரு வாய்ப்பினையும் பெறுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் 50,000 அலகுகள் மின்சாரத்தினையும் மற்றும் 4,000 கிலோ லிட்டர் தண்ணீரையும் இலவசமாகப் பெறுகின்றனர்.