TNPSC Thervupettagam

பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிக்கை

September 16 , 2023 310 days 216 0
  • ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) மற்றும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
  • பாராளுமன்ற உறுப்பினர்களில் 26% பேர் முதுகலைப் பட்டதாரிகளாகவும், 45% பேர் பட்டதாரிகளாகவும் உள்ளனர்.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 உறுப்பினர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 22 பேர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், 89 பேர் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 51 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
  • மேலும் 184 பேர் பட்டதாரிகள், 141 பேர் தொழில்முறைக் கல்வி பட்டதாரிகள்.
  • ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கல்வியறிவு பெறாதவர் ஆவார்.
  • 239 (31.32%) உறுப்பினர்கள் 51 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், 209 (27.39%) பேர் 61 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 184 பேர் 41 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
  • ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே 25 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஆறு பேர் மட்டுமே 81 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
  • 306 (40%) உறுப்பினர்கள் தங்கள் மீது உள்ள குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ள நிலையில், சுமார் 194 (25%) உறுப்பினர்கள் தங்கள் மீது உள்ள பல்வேறு கடுமையான குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ளனர்.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவையினைச் சேர்ந்த ஒரு உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு 38.33 கோடி ரூபாய் மற்றும் 53 (7%) உறுப்பினர்கள் பில்லியனர்கள் ஆவர்.
  • தங்கள் மீது உள்ள குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ளவர்கள் மத்தியில் அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ் அதிக பட்ச விகிதத்தினைக் கொண்டுள்ளது.
  • கட்சி ரீதியாக பார்க்கையில் 385 பாராளுமன்ற உறுப்பினர்களில் 139 (36 %) நபர்கள் பாரதீய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இப்பட்டியலில் கேரளா (73 சதவிகிதம்) முதல் இடத்தில் உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பீகார், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகியன உள்ளன.
  • கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக விகிதத்தினை பீகார் மாநிலம் (50 சதவிகிதம்) கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தெலங்கானா (9%), கேரளா (10%), மகாராஷ்டிரா (34%) மற்றும் உத்தரப் பிரதேசம் (37%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்