TNPSC Thervupettagam

பாராளுமன்றத்தில் பிரேர்னா ஸ்தலம்

June 20 , 2024 160 days 228 0
  • பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் மற்றும் இந்திய வரலாற்றின் சின்னங்களைக் கொண்ட ‘பிரேர்னா ஸ்தலம்’ என்ற கட்டிடத்தினைக் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இதில் முன்னதாக பாராளுமன்ற வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட M.K. காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் தற்போது ஒரே இடத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.
  • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்த சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதே பிரேர்னா ஸ்தலம் நிறுவப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
  • ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கு ஒரு பிரத்தியேக குழு உள்ளது.
  • இது நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கான குழு என்று அழைக்கப் படுகிறது.
  • இதில் இரு அவைகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
  • இருப்பினும், 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்குழு மீண்டும் அமைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்